காதலி ஷாப்பிங் செய்ய 2.80 லட்சத்துக்கு கார் பாகங்களை திருடி விற்ற இளைஞர் கைது!

arrest
arrest
Published on

மும்பையில் காதலிக்காக ஒருவர் நகரத்தில் உள்ள கார் பாகங்களை திருடி போலீசாரிடம் சிக்கி கொண்டார்.

மும்பையில் கடந்த ஆண்டு வடக்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நூற்றுக்கணக்கான கார்களில் இருந்து மின்னணு கட்டுப்பாட்டு தொகுதிகள் (இசிஎம்) மற்றும் இன்ஜெக்டர்களை திருடியதாக 28 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அப்பகுதியில் அடிக்கடி கார் பாகங்கள் திருடுபோவதாக புகார்கள் வந்து கொண்டே இருந்தது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து கார் பாகங்களை திருடும் நபரை தீவிரமாக தேடி வந்தனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை எப்படியோ குற்றவாளி போலீசாரிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

அதில், தான் கடந்த ஒரு வருடமாக கார் உதிரி பாகங்களை திருடி ரூபாய் 2.80 லட்சத்துக்கு விற்பனை செய்து, விற்ற பணத்தை காதலியின் ஷாப்பிங் செலவிற்கு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். எங்கே காதலி பணம் கொடுக்கவில்லை என்றால், விட்டு சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் கார் உதிரி பாகங்களை திருடி பணம் கொடுப்பதாகவும் கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் பல்வேறு கார் உதிரி பாகங்கள் கிடைத்துள்ளது. அவையெல்லாம் அதே பகுதியில் திருடியது என்பது தெரியவந்தது. ஒரு வருட காலமாக அதே பகுதியில் கூலாக சென்று கார் உதிரி பாகங்களை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பலரது கண்களின் மண்ணை போட்டு திரிந்தவர், ஒரு வழியாக ஒரு ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com