கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்; முதல்வர் அறிவிப்பு!

கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்; முதல்வர் அறிவிப்பு!
Published on

கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நேற்று திருச்சி, அரியலூர், மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது;

கங்கைகொண்ட சோழபுரத்தில்  மாளிகைமேட்டில் நடைபெற்று வரக்கூடிய அகழாய்வு பணிகளை நான் நேரடியாக சென்று பார்வையிட்டேன்.  மாமன்னர் ராஜேந்திர சோழன், தெற்காசிய நாடுகளை வென்று, அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்.

அவரது ஆட்சி காலத்தில் கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதை அறிந்து வியந்தேன். அதையெல்லாம் பொதுமக்களும் கண்டறிய வேண்டும் என்பதற்காக கங்கை கொண்ட சோழபுரத்தில் விரைவில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் ராஜராஜசோழனுக்கு சதய விழா கொண்டாடுவது போல, மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப் படும். மேலும் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டப் பகுதியில் 10 கோடி ரூபாய் செலவில் புவியியல் புதைபடிவப் பூங்காவும் அமைக்கப் படும்.

-இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com