பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்
Published on

"கல்கி"யின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பினை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் கருதப்படுகிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த புதிய அப்டேட்டை படக்குழு, சிறிய வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், மார்ச் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த விழா நடைபெற உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com