“இந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம் துன்புறுத்தப்படுகிறார்கள்” – ஈரான் குற்றச்சாட்டு!

Sayyid Ali Hosseini Khamenei
Sayyid Ali Hosseini Khamenei
Published on

இந்தியாவில் அதிகமான முஸ்லீம்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ஒரு நடுநிலை நாடு என்பது நன்றாகவே உலக நாடுகளுக்குத் தெரியும். அதேபோல், பன்முகத்தன்மை மற்றும் அனைத்து மதங்களின் ஒற்றுமையையே இந்தியா விரும்பும் என்பது அனைத்து நாடுகளுக்கும் தெரியும். வன்முறையை முற்றிலும் வெறுக்கும் இந்தியாமீது தற்போது ஈரான் தலைவர் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அயத்துல்லா அலி கமேனி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, “இஸ்லாமிய அடையாளங்களை பகிர்ந்துள்ள நம்மை எப்போதும் அலட்சியப்படுத்த இஸ்லாமிய எதிரிகள் முயற்சிக்கின்றனர். இந்தியா, காசா, மியான்மர் அல்லது உலகின் எந்த பகுதியிலும் இஸ்லமியர்கள்படும் துன்பங்களை மறந்தால் நாம் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது." என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய அரசு, ஈரான் உச்ச தலைவர் குறிப்பிட்டது உண்மைக்கு தகுதியற்றதாகவும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்கப்படுகின்றன என்றும் விளக்கம் அளித்துள்ளது.   

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறியதாவது,  நாடு முழுவதும் மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் நிலவுவதாகக் கூறி, வெளிநாடுகளின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.

ஒருபக்கம் சமீபத்தில், ஈரானுக்கு இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தருவதில்லை என்பதால், சுற்றுலா வரும்படி ஈரான் தூதர் அறிவித்தார்.

இதையும் படியுங்கள்:
News 5 – 18.09.2024 ரயில் சேவைகளில் இன்று முதல் மாற்றம்!
Sayyid Ali Hosseini Khamenei

மற்றொருபக்கம், இஸ்ரேல் பாலஸ்தீன போரில், பாலஸ்தீனத்திற்கு உதவிக்கரம் நீட்டும் ஈரான், இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அறிவித்தது. இஸ்ரேல் என்பது கிறிஸ்தவ நாடாகும். காசாவை உள்ளடக்கிய பாலஸ்தீனம் இஸ்லாமிய நாடாகும். பிற இஸ்லாமிய நாடுகள் இந்த போரை கைவிடுமாறு இஸ்ரேலிடம் கூறிவிட்டன.

ஆனால், இஸ்ரேல் போரை கைவிடுவதாக தெரியவில்லை. ஆகையால் இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈரான் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இஸ்லாமியர்களை இந்தியா துன்புறுத்துகிறது என்று ஈரான் தலைவர் சொன்ன செய்தி உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், ஈரான் இந்தியா உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com