இது தான் நம்ம தமிழ்நாடு..! தஞ்சாவூர் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்..!

Muslims Provide Buttermilk to Devotees at Thanjavur Chariot Festival
Muslims Provide Buttermilk to Devotees at Thanjavur Chariot Festivalimage source: sunnews
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது. மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. பெரிய கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.பெரியகோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை பெருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்றது. மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கள்கிழமை) காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்ப லாம்பாள், வள்ளி, தெய்வா னை உடனுறை சுப்பி ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்த னர். பின்னர், அலங்கரிக்கப் பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலா ம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது. இதையடுத்து காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

தேரானது 4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்த பக்தர்களுக்கு மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்.தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார டெல்டா பகுதிகளில் மத நல்லிணக்கம் என்பது மற்ற பகுதிகளைவிட அதிகம் எனலாம். அவரவர் அவரவருக்கு விருப்பமான மதங்களை பின்பற்றினாலும், அதை கொண்டு தங்களுக்குள் பகைமை பாராட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறார்கள். அதை பறைசாற்றும் வகையில் இஸ்லாமிய ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து தஞ்சாவூர் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கினர் இஸ்லாமியர்கள்.இதனை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : தமிழகத்தில் LPG கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் ஸ்ட்ரைக்..!
Muslims Provide Buttermilk to Devotees at Thanjavur Chariot Festival
logo
Kalki Online
kalkionline.com