தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

என் செல்போன்களை ஒட்டுக் கேட்கிறாங்க; தெலுங்கானா ஆளுநர் தமிழிசை புகார்!

Published on

தனது தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையில் ராஷ்டிரிய தெலுங்கானா சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பாஜக கட்சிக்கு எதிர்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் அந்த மாநில முதல்வர் சந்திரசேர ராவுக்கும்  ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கியது.

இந்நிலையில், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தெலுங்கானாவில் தனது முன்னாள் உதவியாளர் துஷார் தனக்கு தீபாவளி வாழ்த்து சொன்னதிலிருந்து தனது போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெலுங்கானாவில் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது, தேவையில்லாமல் ஆளுநர் மாளிகையை குற்றம்சாட்டி பேசுகின்றனர் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com