#JUST IN : சென்னை மயிலாப்பூரில் எம்.எல்.ஏ த.வேலுவின் வேட்பு மனு நிறுத்திவைப்பு..!

எம்.எல்.ஏ த.வேலு
எம்.எல்.ஏ த.வேலு
Updated on

மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய மயிலை த.வேலு மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது வேட்பு மனுவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளரின் வேட்பு மனுவில் சொல்லப்பட்டிருக்கிற தகவல்களில்  உண்மை இல்லாமல் இருக்கிறது. அவர் காட்டியிருக்கக்கூடிய வருமானக் கணக்கு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பாஜக தரப்பு அதில் உண்மைத்தன்மை இல்லையென்று கருதுவதாக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக மயிலை த வேலுவினுடைய வேட்புமனு தற்பொழுது பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வேட்பு மனுக்கள் இறுதியில் தான் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். அதாவது அனைத்து வேட்புமனுக்களும் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தான் இன்று மாலை 3 மணிக்கு முன்பாகத் தான் பரிசீலனைக்கு எடுக்கப்படும்.

logo
Kalki Online
kalkionline.com