10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசியா விமானம்… வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டதா? வெளியான மர்மம்!

Airplane
Airplane
Published on

கடந்த 2014ம் ஆண்டு மலேசியா ஏர்லைனுக்கு சொந்தமான விமானம் ஒன்று நடுக்கடலில் மாயமானது. இந்த விமானம் குறித்த தகவல்கள் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தெரியவந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசியா ஏர்லைனின் எம்ஹச்-370 என்ற பயணிகள் விமானம் கோலாலம்பூரிலிருந்து சீனாவிற்கு புறப்பட்டது. இந்த விமானம் இந்திய பெருங்கடல் வழியாக சென்றுக்கொண்டிருக்கும்போது திடீரென்று மாயமானது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால், விமானம் இருந்த இடமே தெரியாததால் 2017ம் ஆண்டு தேடும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே ஆப்பிரிக்கா கடற்கரை மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ள தீவில் மாயமான விமானத்தின் சில பாகங்கள் குப்பைகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைவைத்து இந்திய பெருங்கடலின் 7 வது வளைவில் விமானம் விழுந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், விமானத்தின் பெரும்பகுதி மற்றும் அந்த விமானத்திற்கு என்ன ஆனது? எப்படி விழுந்தது? போன்ற எதுவுமே தெரியவரவில்லை. பல வருடங்களாகவே இது ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்தநிலையில், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வின்சென்ட் லைன் என்ற ஆய்வாளர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது போஸ்டில் குறிப்பிட்டதாவது, “இந்தியப் பெருங்கடலில் 7வது வளைவில் எரிபொருள் தீர்ந்ததால் விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஏனெனில், வலது இறக்கை முதலில் கடலில் மோதியிருந்தால் இப்படி சொல்லலாம். ஆனால், இதிலோ வலது இறக்கைக்கு ஒன்றுமே ஆகவில்லை. விமானத்தின் இறக்கைகளில் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்துப் பார்க்கும்போது விமானத்தை வேண்டும் என்றே கடலில் இறக்கியது போலவே இருந்தது. கடந்த 2009ல் ஹட்சன் நதியில் அமெரிக்க பைலட் ஒருவர் இதையே செய்திருந்தார். மாயமான விமானத்தின் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களை ஆய்வு செய்து பார்த்த போது, அது ஹட்சன் நதியில் நடந்த சம்பவத்தை ஒத்துப் போய் இருந்தது. எனவே, எரிபொருள் தீர்ந்ததால் இந்த விபத்து நடந்திருக்காது" என்றார்.

ஆகையால், விமானத்தை வேண்டுமென்றே கடலில் விபத்துக்குள்ளாக்கி இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார். இதற்கு அவர் மூன்று ஆதாரங்களையும் முன் வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
சந்திரனுக்கு ராக்கெட் விட்டால் போதுமா?
Airplane

1.  விமானத்தின் பாதை திடீரென மாறி இருக்கிறது. அதன் பறந்து கொண்டிருந்த உயரத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2.  விபத்து நடந்த போது விமானத்தில் இருந்த தகவல் தொடர்பு அமைப்புகள் முடங்கி இருந்துள்ளது. தகவல் தொடர்பு அமைப்பு முடங்கும் அளவுக்கு வானிலை மோசமாக இல்லை. எனவே, யாரோ வேண்டும் என்றே முடக்கியுள்ளனர்.

3.  பைலட் செயல்பாடுகளும் நார்மலாக இல்லை. பைலட்டின் உரையாடல்களைக் கவனித்த வரை அதில் ஏதோ தப்பாக இருப்பதை உணர முடிந்தது.

என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், வேண்டுமென்றே இரண்டு கடல் சேரும் இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. அங்கு அலைகள் அதிகமாகவே இருக்கும். இதனால்தான் இன்றுவரை அதன் பாகங்கள் கிடைக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com