அமெரிக்க ராணுவ தளத்தில் அயலான்.. எரியில் மூழ்கி திடீரென பறந்த அதிர்ச்சி வீடியோ! 

UFO spotted on American military base.
UFO spotted on American military base.

அமெரிக்காவின் ராணுவ தளத்தின் மீது ஏலியன் பறக்கும் தட்டு பறந்து செல்லும் காணொளி இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. 

நமது பூமியைப் போலவே மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே பல கிரகங்கள் பற்றிய ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை ஏதாவது கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறது என்றால், அங்கே மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கலாம். இத்தகைய ஆய்வில் அமெரிக்காவின் நாசா முன்னிலையில் உள்ளது. 

இதையும் படியுங்கள்:
எதிர்காலத்தில் மனிதர்கள் வேற்று கிரகத்தில் வாழ வாய்ப்புள்ளதா? 
UFO spotted on American military base.

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா? இல்லையா? என்ற ஆய்வுகள் ஒருபுறம் இருக்க, பூமியில் ஏலியன்கள் வந்துள்ளதா என்ற ஆய்வும் நடந்து வருகிறது. இணையத்தில் அவ்வப்போது பூமிக்கு ஏலியன் வந்த வீடியோ என பல காணொளிகள் ட்ரெண்டாகி வரும். அப்படித்தான் சமீபத்தில் அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஒரு பறக்கும் தட்டு பறந்து செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பறக்கும் தட்டு காணொளி பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கிறது. இதில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது, ஒரு பறக்கும் தட்டு பறப்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஏலியன்களின் நடமாட்டம் என பலர் கூறுகின்றனர். சமீப காலமாகவே ஏலியன் குறித்த பேச்சுக்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது லீக்காகி இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

அமெரிக்க ராணுவ தளத்தில் பல அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு மத்தியில் இந்த பறக்கும் தட்டு எப்படி உள்ளே நுழைந்தது என்பது மர்மமாகவே இருக்கிறது. அமைதியாக உள்ளே நுழைந்த பறக்கும் தட்டு, அங்கே அருகே இருக்கும் ஏரியில் சுமார் 17 நிமிடங்கள் வரை மூழ்கி, பின்னர் திடீரென வெளியே வந்து அதிவேகமாக வானத்தை நோக்கி பறந்து மாயமானது. 

இதை காணொளியில் தெளிவாக பார்க்க முடியவில்லை என்றாலும், ஏதோ ஒன்று ஜெல்லி மீன் தோற்றத்தில் நகர்வது தெளிவாக தெரிகிறது. பொதுவாகவே ஏலியன்கள் வந்தது என்று காணொளியை உண்மையான கண்டறிவது சிரமம். அதே போல தான் இந்த காணொளியும் உண்மையா பொய்யா என்பதைக் கண்டறிவது குழப்பமாகவே இருக்கிறது. 

அது என்னவோ தெரியவில்லை ஏலியன்களுக்கு அமெரிக்கர்களைத் தான் அதிகம் பிடிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com