தமிழக ஆளுநர் குறித்து நாகலாந்து ஆளுநர் கருத்து : ஆலோசனையா, அறிவுரையா?

தமிழக ஆளுநர் குறித்து நாகலாந்து ஆளுநர் கருத்து : ஆலோசனையா, அறிவுரையா?
Published on

தமிழ்நாடு பாஜகவின் முக்கிய அடையாளமாக விளங்கிய வரும், தற்போதைய நாகலாந்து மாநிலத்தினுடைய ஆளுநருமான இல. கணேசன் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாப்பூர் பாலசுப்பிரமணியன் சாமி கோயிலில் தரிசன மேற்கொள்ள வருகை தந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன் கூறியது, நாகலாந்து மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொள்ள வருகை தந்தேன் என்று கூறினார். தொடர்ந்து தமிழக ஆளுநர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இல. கணேசன், ஆர்.என். ரவி நல்ல மனிதர், எனது நண்பரும் கூட, நாகலாந்தில் பணியாற்றியவர், எனக்கு முன்னோடி, அவர் நாகலாந்து மாநிலத்தில் பணியாற்றிய பொழுது மிகச் சிறப்பாக தனது பணியை செய்திருக்கிறார் என்று மக்கள் பாராட்டுகின்றனர் என்றார்.

மேலும், பேசிய அவர், தொடர்ந்து கடற்கரைக்கு அருகே வசிப்பவர்கள் கடல் நீர் ஊருக்குள் வராது என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள், கடலுக்கு ஒரு வரம்பு இருக்கிறது, அது போல் எல்லோரும் தங்கள் வரம்புக்கு உட்பட்டு நடந்தால் நல்லா இருக்கும் என்றார். தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து பிரச்சினைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது தற்போது நேரடியாக பொதுவெளியில் வெளிப்பட்டு வரக்கூடிய இந்த நேரத்தில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் இந்த பேச்சு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com