பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
Published on

பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக நாகர்கோவில் காசி மீது சிபிசிஐடி போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தனர். 120 பெண்களை அவரை ஏமாற்றியதாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர் என்பதும் காசியின் லேப்டாப்பில் 400-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ, 1900க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் கண்டு பிடிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது.

காசி கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் நெருங்கிப் பழகி அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், பொறியியல் பட்டதாரி, மாணவி உட்பட பல பெண்கள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் காசி மீது போக்சோ, கந்து வட்டி, பாலியல் வல்லுறவு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் காசி மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் ஒரு வழக்கில் இன்று மகளா நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார்.

மேலும் அவர் 120 பெண்களை ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டதாகவும் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நாகர்கோவில் நீதிமன்றம் வெளியிட்ட நிலையில் இளம் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com