மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு..!மருத்துவமனைக்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின்..!

R. Nallakannu
R. NallakannuImg Credit: DT next
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101.கடந்த சில காலமாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், அவருக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்த நிலையில்,கடந்த பிப்ரவரி 1ம் தேதி திடீரென பாதிப்பு அதிகரித்ததால் உடடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு சுவாசப் பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதால், அவருக்கு தேவையான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

மேலும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டது.இதனையறிந்த அவரது ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்தமுதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விரைந்தார். மேலும் நல்லக்கண்ணுவின் உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதையும் படியுங்கள்:
#JUST IN : வேலூரில் அதிர்ந்த தவெக மேடை! விஜய் பேசிய முழு உரை..!
R. Nallakannu

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com