நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடைகளால் மாலை!

வடைகளால் மாலை
வடைகளால் மாலை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்க ஒரு லட்சத்து எட்டு வடைகளைக் கொண்ட வடை மாலை தயாரிக்கும் பணி இன்று தொடங்கியது.

நாமக்கல்லில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் உலகப் பிரசித்தி பெற்றவர். இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப் படும். அண்டுதோறும்  மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் கொண்டாடப் படும் இந்த அனுமன் ஜெயந்தி விழாவில், நாமக்கல் ஆஞ்சநேயருக்கு  ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட பிரமாண்ட மாலை சாத்தப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு விநியோகிக்கப் படும்.  

அந்த வகையில் இந்தாண்டு இம்மாதம் 23-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்றைய தினம்  அதிகாலை 5  மணிக்கு சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட உள்ளது. இதற்காக  வடைகள் தயாரிக்கும் பணி கோவில் மண்டபத்தில்  இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள் வடைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வடை தயாரிக்கும் பணி 3 நாட்கள் நடைபெறும் என்றும் அதன்பின்னர் வடை மாலை கோர்க்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com