புளிச்ச கீரை தண்டில் நாப்கினா? கோவை மாணவிகள் அசத்தல்!

நாப்கின்
நாப்கின்
Published on

கோவையை சேர்ந்த பேஷன் டெக்னாலஜி மாணவிகள் சிலர் புளிச்ச கீரை தண்டிலிருந்து சானிடரி நாப்கின்களை உருவாக்கி உள்ளனர்.

பெண்களின் தீராத ப்ரச்சனைகளில் ஒன்று மாதவிடாய் காலங்களில் அவர்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள். பெரும்பாலான நாப்கின்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை. ஆனால் இவை பெண்களுக்கு ஏற்படுத்தும் பிரச்சனைகள் சொல்லில் அடங்காதவை. தோல் நோய்கள், அரிப்பு , அலர்ஜி முதல் புற்றுநோய் வரை வருவதாக சுகாதார வல்லுநர்கள் பல்வேறு ஆய்வில் சொல்லி வருகிறார்கள்.

புளிச்ச கீரை
புளிச்ச கீரை

இதனை உணர்ந்த கோவையை சேர்ந்த பேஷன் டெக்னாலஜி மாணவிகள் சிலர் புளிச்ச கீரை தண்டிலிருந்து சானிடரி நாப்கின்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்த மாணவிகள் கோவை பேஷன் டெக்னாலஜி கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பல்வேறு புதுமைகளை செய்து வருகின்றனர். இவர்கள் கோவையை சேர்ந்த விவசாயிகளை சந்தித்த பொது அங்கே விளையும் புளிச்ச கீரைகளில் கீரைகளை உபயோகித்த பிறகு அதன் தண்டுகள் வீணாகி போவதாக வருத்தப்பட்டனர். இதனால் அந்த தண்டினை பயன் படுத்தி முதலில் ஆடைகளை தயாரித்து பயன் படுத்தினர்.

 சானிட்டரி நாப்கின்கள்
சானிட்டரி நாப்கின்கள்

அந்த ஆடைகள் நீர் உறிஞ்சும் தன்மை அதிகம் உடையதாக இருந்ததால் அதனை பயன்படுத்தி சானிடரி நாப்கின்களை பயன்படுத்தினால் உபயோகமாக இருக்கும் என நினைத்து இந்த நாப்கின்களை தயாரித்தனர். இவை நான்கே மாதத்தில் மட்கும் தன்மையை பெற்றது என்பது இதன் தனி சிறப்பு.

பொதுவாக பிளாஸ்டிகால் ஆன சானிடரி நாப்கின்கள் மட்க வெகு ஆண்டுகள் ஆகுமென சுகாதார வல்லுநர்கள் சொல்கின்றனர். இந்த கண்டுபிடிப்புகளுக்குக்காக இவர்கள் விருதுகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com