இந்திய நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் நரேந்திர மோடி!

Narendra Modi
Narendra Modi

ந்தியத் திருநாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றார் நரேந்திர மோடி. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பிரதமராகப் பதவியேற்ற மோடி, 'நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்…' என ஆரம்பித்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். முன்னதாக, நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவுக்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் 'பாரத் மாதா கி ஜி' என்று பெரிதாக கோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல், ஹெச்டி குமாரசாமி, தர்மேந்திர பிரதான், ஜித்தன் ராம் மாஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங், சர்பானந்தா சோனோவால் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்தப் பதவியேற்பு விழாவின்போது மொத்தம் 72 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் மீண்டும் அமித் ஷா, ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நீல நிற ஓவர் கோட் கொண்ட உடை அணிந்து வந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, 2014, 2019 மற்றும் 2024 என மூன்று முறை பிரதமராக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
வெளிநாட்டுத் தலைவர்கள் வருகையுடன் களைகட்டியது பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா!
Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகனாத், பூடான் பிரதமர் ஷெரிங் டாக்பே, வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செஷல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல், எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். நேற்றுதான் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் செய்த ஆலோசனைக்குப் பிறகு, கார்கே இந்தப் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com