நிலவுக்கு போகலாம்.. வாரீர்களா? 14-ம் தேதி நாசா ராக்கெட் ஏவி பரிசோதனை!

நாசா
நாசா
Published on

நிலவுக்கு மனிதனை அனுப்பும் ஆர்டெமிஸ் என்கிற திட்டத்தின் கீழ் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, இம்மாதம் 14-ம் தேதியன்று ராக்கெட்டை விண்ணில் செலுத்தவுள்ளது.

அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1969-ல் முதன்முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. அதன்பின்னர் நிலவுக்கு யாரும் மனிதர்களை அனுப்பவில்லை. இந்நிலையில் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியாக, ஆர்டெமிஸ் -1 என்ற ராக்கெட்டை இம்மாதம் 14-ம் தேதியன்று விண்ணில் செலுத்தவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ராக்கெட் செலுத்தப் படவிருந்த திட்டமானது, ராக்கெட்டில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. பின்னர் செப்டம்பர் 3-ம் தேதியன்று சில தொழில்நுட்பக் காரணங்களால் பயணம் தடைபட்டது.

இந்நிலையில் தற்போது இன்ஜின் எரிபொருள் கசிவு உள்ளிட்ட அனைத்து கோளாறுகளும்  சரிசெய்யப்பட்ட நிலையில் நவம்பர் 14-ம் தேதியன்று ராக்கெட் விண்ணில் செலுத்தப் படவுள்ளது. அந்த வகையில் ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுன்ட்டன் நடைமுறைகள் நவம்பர் 12-ம் தேதியன்று தொடங்குவதாக நாசா அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com