ஐந்து மிகப்பெரிய குறுங்கோள்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் பல கோடி அதிசயங்கள் நிறைந்திருக்கிறது. ஆய்வு செய்யச் செய்ய ஆயிரக் கணக்கான ரகசியங்களை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கிறது விண்வெளி. இதன் காரணமாகவே விண்வெளியை விஞ்ஞானிகள் ஆச்சரியம் நிறைந்ததாகப் பார்க்கின்றனர். அதன் வரிசையில் தற்போது பூமியை நோக்கி ஐந்து குறுங்கோள்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
2.26 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் 190 அடி அகலமுள்ள 2023LN1 என்ற குறுங்கோள் இன்று பூமியை நெருங்கிப் பயணிக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
2018NW என்ற குறுங்கோல் பூமியிலிருந்து சுமார் 4.29 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து மணிக்கு 78500 மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
இந்த ஜூன் மாதம் இறுதியில் 2023MD2 என்ற குறுங்கோல் பூமியை நெருங்கி வரும் என்றும், இது சுமார் 1.33 மில்லியன் மைல் தூரத்திலிருந்து 30,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
அடுத்தபடியாக 2023MQ2 என்ற குறுங்கோல், பூமியிலிருந்து சுமார் 2.56 மில்லியன் மைல் தூரத்திலிருந்து, 21,000 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
இறுதியாக 130 அடி அகலமுள்ள 2023NE குறுங்கோல் பூமிக்கு மிக நெருக்கமாக கடக்கும் என நாசா சமீபத்தில் தெரிவித்துள்ளது.
இப்படி இந்த ஐந்து குறுங்கோல்களும் பூமிக்கு நெருக்கமாக கடந்து சென்றாலும், பூமியில் இதனால் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சூரிய குடும்பத்தில் உள்ள பூமியைச் சுற்றி பல விண்கற்களும் குறுங்கோள்களும் சுற்றி வருகிறது. இவை எப்படி எந்த பாதையில் பயணிக்கிறது என்பதையெல்லாம் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக பல உலக நாடுகள் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறது. இதுபோன்ற விண்வெளி ஆராய்ச்சிகள் மூலமாக, பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் குறித்த விவரங்களை நம்மால் முன்கூட்டியே அறிய முடிகிறது. அதற்காகத்தான் பூமியைச் சுற்றி விண்வெளியில் பல செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.