நாசா உங்க birthdayக்கு கிப்ட் குடுப்பாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?

NASA Free Birthday Surprise
NASA Free Birthday Surpriseimage credit-news18marathi.com,thrillist.com
Published on

ஆன்லைன் மூலம் நாசாவிடமிருந்து எதிர்பாராத பிறந்தநாள் பரிசை பெறுவது தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. அதாவது நாசாவின் இலவச பிறந்தநாள் ஆச்சரியம் என்பது, நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி (Hubble Telescope) கருவிகள் மூலம் உங்கள் பிறந்த தேதியில் விண்வெளியில் நடந்த நிகழ்வுகளை, நாசாவின் இணையதளத்தின் மூலம் இலவசமாகப் பார்க்கும் வசதியாகும். இதன் மூலம் உங்கள் பிறந்தநாளில் பிரபஞ்சத்தின் அற்புதமான படங்களை நீங்கள் பார்க்க முடியும். இது ஒரு அற்புதமான மற்றும் தனித்துவமான பிறந்தநாள் பரிசாகும், மேலும் இது விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி அறிய ஒரு சிறந்த வழியாகும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் browser சென்று hubble birthday என்று டைப் செய்தால் நாசாவின் அதிகாரப்பூர்வமான இணையதளம் வரும். விண்வெளியில் இருக்கும் Hubble சாட்லைட் ஒவ்வொரு நாளும் விண்வெளியில் இருக்கும் நட்சத்திரம், கிரகங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கும்.

இந்தப் படங்கள் கருந்துளைகள், ஒளிரும் விண்மீன் திரள்கள், நெபுலாக்கள், பூமியின் அரிய காட்சிகளைக் காட்டுகின்றன.

இதில் சென்று உங்களது பிறந்த மாதம், தேதியை பதிவிட்டு submit கொடுத்தால் உங்களுடைய பிறந்த அன்று விண்வெளியில் Hubble சாட்லைட் படம் பிடித்த பிரபஞ்சத்தின் அற்புதமான படங்களை உங்களுக்கு காட்டும். இந்த பிரபஞ்சத்தின் அற்புதமான படங்களை பெறுவது முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாசாவின் இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் தங்கள் பிறந்த தேதியை உள்ளிட்டு விண்வெளி புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2022-ம் ஆண்டு முதல், #NASABirthdayGift என்ற ஆஷ்டேக் இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. ஆனால் இப்படி ஒரு அம்சம் இருப்பது பற்றி பலருக்குத் தெரியாது என்பதால் ஒருசிலர் மட்டுமே இதன் மூலம் அரிய புகைப்படங்களை பெற்றுள்ளனர். ஆனால் சமீபத்திய சமூக ஊடகப் பதிவுகள் மூலம் தற்போது பலருக்கும் இதுகுறித்து தெரியவந்துள்ளது.

‘இந்தப் பரிசு பிரபஞ்சத்தின் அழகைப் பகிர்ந்து கொள்வதற்கானது’ என்று நாசா கூறியுள்ளது. ஹப்பிளின் 30+ ஆண்டுகளாக சேகரிக்கப்படும் புகைப்படங்களில் ஒரு நாளைக்கான ஒரு படம் எப்போதும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பூமியின் 2வது நிலா : நாசா காட்டும் "குவாசி மூன்"..!!
NASA Free Birthday Surprise

உங்களுக்கு தெரிந்தவர்களின் பிறந்தநாள் இனிதான் வரப்போகிறது என்றால் இப்பொழுதே மறக்காமல் இந்த விஷயத்தை சொல்லி விடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com