கதை கூறுதல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவப்படுத்தும் விதமாக முதன்முதலின் டெல்லியில் National Creators Award விழா நடைபெற்றது. பிரதமர் மோதி விருது வழங்கித் தேர்வானவர்களைக் கௌரவித்தார்.
நேற்று புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது. இதன்மூலம் படைப்பாளிகளை ஊக்குவித்து இன்னும் அதில் சிறப்பாக விளங்க இந்த விழா நடத்தப்பட்டது. கதை கூறுபவர், இந்த ஆண்டிற்கான பிரபல படைப்பாளர், க்ரீன் சேம்பியன், அதிக தாக்கத்தை ஏற்படுத்திய விவசாய பிரிவின் படைப்பாளி, இந்த ஆண்டிற்கான கலாச்சாரத் தூதுவர், சர்வதேசப் படைப்பாளி போன்ற 20 துறைகளில் விருது வழங்கப்பட்டது.
கலாச்சார தூதுவருக்கான விருதை வழங்கும்போது பின்னணி பாடகர் மித்தாலி தாக்கூர் கிளாசிக்கல் இசை மற்றும் ஃபோக் இசைப் பாடினார்.
இந்தியா முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் வோட்டிங் முறையில் தேர்ந்தெடுக்கும்போது கிட்டத்தட்ட 1 மில்லியன் வோட்டுகள் போடப்பட்டன.
அந்தவகையில் 23 நபர்கள் அதில் வெற்றிபெற்றனர். அதில் மூன்று சர்வதேச படைப்பாளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தவகையில் கேமிங்கில் சிறந்தப் படைப்பாளி என்ற விருதை வாங்கியது நிஸ்ச்சே என்பவர். சிறந்த உடல்நலம் மற்றும் உடற்பகுதிப் படைப்பாளருக்கான விருதை அன்கிட் பையான்பூரி வாங்கினார். கல்விப் பிரிவில் சிறந்தப் படைப்பாளியாக நமன் தேஷ்முக் மற்றும் உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளியாக கபிதா சிங் ஆகியோர் விருதுகள் வாங்கினார்கள். மேலும்,
ஆண்களுக்கான ஆக்கப்பூர்வமான படைப்பாளி – ஆர்ஜே. ரௌனக்
பெண்களுக்கான ஆக்கப்பூர்வமானப் படைப்பாளி – ஷர்தா
ஃபேஷன் ஐக்கான் விருது – ஜான்வி சிங்
தொழில்நுட்பப் பிரிவில் சிறந்தப் படைப்பாளி – கௌரவ் சௌத்ரி
பயணப்பிரிவில் சிறந்தப் படைப்பாளி - கமியா ஜானி
சிறந்த சர்வதேச படைப்பாளி – ட்ர்யூ ஹிக்ஸ்
சமூதாய மாற்றத்திற்கான சிறந்தப் படைப்பாளி – ஜயா கிஷோரி
க்ரீன் சேம்பியன் – பங்கிட் பாண்டே
Disruptor of the year – ரன்வீர் அல்லாபாடியா
சிறந்த நானோ படைப்பாளி – பியுஷ் புரோஹித்
சிறந்த மைக்ரோ படைப்பாளி – அரிடமான்
அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய விவசாய பிரிவின் படைப்பாளி – அக்ஷய் தபாஸ்
இந்த ஆண்டிற்கானப் பிரபல படைப்பாளர் – அமன் குப்தா.
ஆகியோர் பிரதமரிடம் விருதுகள் வாங்கிக்கொண்டனர்.