

கடல் சார் வணிகத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 அன்று தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. முப்புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப இந்தியாவில் கடல்சார் தினம் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது தானே..!
இந்தியக் கப்பல் துறையின் மகத்தான பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் தேசிய கடல்சார் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5 ஆம் நாளன்று இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதன் நினைவாக 1964 ஆண்டு முதல், ஏப்ரல் 5ம் நாளானது தேசிய கடல்சார் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 அன்று தொடங்கும் தேசிய கடல் வாரத்தின் கடைசி நாளில் தேசிய கடல்சார் தினம் (national maritime day ) அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டாடுவதே இதன் சிறப்பு . கடல் சார் தினம் தொடங்கி 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது இந்தியா .தற்போதைய 2023 ஆண்டு விழா கொண்டாட்டம் மிக சிறப்பாக கொடாடப்பட்டு வருகிறது .
இந்த ஆண்டுக்கான தேசிய கடல்சார் தினத்தின் தீம் 'கப்பலில் அம்ரித் கால்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விடுதலைக்கு பிறகான கடல் சார் வணிகத்தின் பொன்விழாவைக் குறிப்பிடுகிறது. இது இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த காலத்தில் வருவதால், 75-100 ஆண்டுகள் வரையான காலத்தை குறிக்கும் அம்ரித் கால் என்ற வார்த்தையால் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் வளமான கடல்சார் வரலாறு மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை ஆதரிப்பதில் தற்போதைய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தேசிய கடல்சார் தினம் முக்கியமானது. தங்கள் குடும்பங்களை விட்டு விலகி கடலில் பல மாதங்கள் கழிக்கும் மாலுமிகளுக்கு நன்றி தெரிவிக்க இந்த தினம் முக்கியத்துவம் பெற்றது.
கடல்சார் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சிறப்புமிக்க நபர்களுக்கு விருது வழங்கி இந்திய அரசு தேசிய கடல்சார் தினத்தை கொண்டாடுகிறது. அரசு கடலில் உயிர் தியாகம் செய்த மாலுமிகளுக்கும் அஞ்சலி செலுத்துகிறது.