பா.ஜ.க.வின் பொது சிவில் சட்டம் யோசனைக்கு கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி எதிர்ப்பு!

பா.ஜ.க.வின் பொது சிவில் சட்டம் யோசனைக்கு  கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி எதிர்ப்பு!
Updated on

நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் யோசனைக்கு மேகாலயத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேகாலய மாநில முதலமைச்சரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான, கான்ராடு சங்மா கூறியிருப்பதாவது,“பொது சிவில் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கும், தனித்துவமான கலாசார பண்புகளுக்கு முரணானது என்று கூறியுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் ம.பி.யில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் நாட்டிற்கு அவசியம் என்று வலியுறுத்தியிருந்தார். ஒரு நாடு ஒரே சமயத்தில் இரண்டு சட்டங்களின் கீழ் இயங்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். உச்சநீதிமன்றம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும். அரசியலமைப்புச் சட்டமும் சம உரிமையை வலியுறுத்துவதாகவும் அப்போது அவர் பேசியிருந்தார்.

இது தொடர்பாக சட்டக்கமிஷன் பொது மக்களிடமிருந்தும், மத அமைப்புகளிடமிருந்து கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னால் சட்டமாக அமல்படுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் பா.ஜ.க. தனது நீண்டநாள் வாக்குறுதியை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகாலய மாநில முதல்வருமான கான்ராடு சங்மா, பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக தேசிய மக்கள் கட்சியின் இணைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கான்ராடு சங்மா, “இந்தியாவில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பன்முகத்தன்மைதான் இந்தியாவின் பலம். இந்த நிலையில் பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவுக்கு எதிரானது என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மத உரிமைகள், பாலின நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை பற்றிய விவாதங்களை இந்த விவகாரம் தூண்டிவிட்டுள்ளது. இதன் மூலம் பிராந்திய அளவில் எதிர்ப்புகளை பா.ஜ.க. சமாளிக்க வேண்டிவரும் எனத் தெரிகிறது. வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி அங்கம் வகிக்கிறது. 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் சங்மாவின் கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ளனர். கான்ராடு சங்மா முதல்வராக உள்ளார். அவருக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் மேகாலய மாநிலம் தவிர மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசத்தில் தேசிய மக்கள் கட்சிக்கு அரசியல் அடித்தளம் உள்ளது. இந்த மாநிலங்களில் அக்கட்சி சார்பில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.வடகிழக்கு மாநிலங்களுக்கு என தனித்துவமான கலாசார மரபுகள் உள்ளன. அவை அப்படியே சீர்குலையாமல் இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அரசு எந்த வகையான மசோதாவை கொண்டுவர நினைக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. அதன் உள்ளடக்கத்தை

பார்க்காமல் அதுபற்றி முழுவதும் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்று சங்மா தெரிவித்துள்ளார்.பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மத்திய அரசு கூறியுள்ளது பல்வேறு சமூகத்தினரிடையே அதாவது பல்வேறு கலாசார நடைமுறைகள் மற்றும் சமூக நியதிகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com