தேசிய வெற்றி தினம்; போர் நினைவு சின்னத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இன்று தேசிய வெற்றி தினம் கொண்டாடுவதை முன்னிட்டு டெல்லியில்  போர் வீரர்கள் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில், பாகிஸ்தானை இந்தியா போரில் வீழ்த்தியது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் இன்றைய  நாள் தேசிய வெற்றி தினமாக கொண்டாடப் படுகிறது.

இந்த நிலையில், வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் போர் நினைவு சின்னத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். மேலும் பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக முப்படை தலைமை தளபதிகள் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com