ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாத போக்குவரத்தாகி விட்டது. உள்ளூர் முதல் வெளியூர் வரை பேருந்துகளில் பயணிப்பதை விட ரயில்களில் பயணிப்பதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். இரயில்வே துறையில் பல்வேறு டெக்னாலஜி மற்றும் பயணிகளுக்கான வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு மக்கள் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னும் கூட சில நீண்ட தூர ரயில்களில் கழிப்பறைகள் சுகாதார பிரச்சினை இருந்து வருகிறது.
இதற்கு தீர்வு தரும் விதமாக உள்ளது மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் சமீபத்திய அறிவிப்பு. நீண்ட தூர ரயில்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்த, அனைத்து பெட்டிகளிலும் தொடர்ச்சியான தூய்மைப் பணியை மேற்கொள்ள சிறப்பு தனியார் நிபுணர் குழுக்கள் நியமிக்கப்படும் எனவும் முதற்கட்டமாக 80 நீண்ட தூர ரயில்கள் தேர்வு செய்யப்பட்டு 6 மாதங்களில் இந்தப் பணியை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் கூறியதுபோல், நீண்ட தூர ரயில்களில் கழிப்பறைகள், பயணிகள் உள்புறம் மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற அனைத்தையும் பயணத் தூரத்தில் முறையாக அழுக்குச் சுத்தம் செய்யும் புதிய tech-enabled cleaning teams அறிமுகப்படுத்தப்பட்டு பொது கோச்சுகளும் (General coaches) கூட அடிக்கடி சுத்தம் செய்யப்படும் நெறிமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள ரயில் தூய்மை திட்டத்தின் கீழ், அதன் வழித்தடத்தில் உள்ள நிா்ணயிக்கப்பட்ட ரயில் நிலையத்தில் மட்டுமே ரயில் பெட்டிகள் தூய்மை செய்யப்படும். ஆனால், புதிய திட்டத்தின்படி, ரயில் பயணம் முழுவதும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் அல்லது தேவைப்படும்போதெல்லாம் ரயில்களில் இதற்காகவே நியமிக்கப்பட்ட பணியாளா்கள் தூய்மைப் பணியை மேற்கொள்வா். பயணிகள் பெட்டிகள், கழிவறைகள், கை கழுவும் கோப்பை, குப்பைகள் சேகரிப்பு, சிறு சிறு கோளாறுகளை சரிசெய்தல், ரயில்களில் தண்ணீா் நிரப்புதல் உள்ளிட்ட அத்யாவசிய சுகாதாரப்பணிகளை மேற்கொள்வா். இந்தத் தூய்மைப் பணி குறித்து கண்காணிப்பு, கருத்து கேட்பு மற்றும் பணியாளா்களின் செயல்பாடுகள் மேலாண்மை உள்ளிட்டவை தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்நேர அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என குறிப்புகள் கூறுகிறது.
மேலும் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தெற்கு ரயில்வே 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் கோயம்புத்தூரிலும், கேரளாவின் எர்ணாகுளத்திலும் ரயில் திறனை இரட்டிப்பாக்கும் என்றும் அமைச்சர் அறிவிப்பு கூறுகிறது.
இதனை முன்னெடுக்கும் வகையில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம் (கொச்சி) உள்ளிட்ட தெற்கு ரயில்வே மையங்களில் உள்ள பயிற்சி முனையங்களுக்கான விரிவான மேம்படுத்தல்களையும் அவர் அறிவித்தார்.
"பயணிகளின் தேவையை அதிகரித்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நகரங்களில் ரயில் பெட்டி முனையங்களை விரிவுபடுத்தி, பிரிவு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கை எங்கள் ரயில் வலையமைப்பை மேம்படுத்தி, நாடு தழுவிய இணைப்பை மேம்படுத்தும்" என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அமைச்சர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக தளங்கள், நிலையான பாதைகள், புதிய முனையங்கள், முறையான பராமரிப்பு வசதிகள் மற்றும் பல-தடமறிதல் மூலம் விரைவான பயண வளர்ச்சியை இந்த திட்டத்தின் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரயில் சேவைகள் அதிகரிப்பு வரிசையில் ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 3 நாட்களில் இருந்து 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2026-க்குள் 52 வாரங்களில் 52 சீர்திருத்தங்கள் கொண்ட திட்டத்தின் கீழ், நீண்ட தூர இரவு பயணங்களுக்கு மேம்பட்ட படுக்கை வசதி மற்றும் நவீன வசதிகள் கூடிய வந்தே பாரத் ரயில்கள் (Vande Bharat Sleeper)அறிமுகம் செய்யப்பட உள்ளன.
சாதாரண மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிர்வு குறைவு, பாதுகாப்பு அதிகரிப்பு புதிய LHB கோச்சுகள் மற்றும் மேம்பட்ட சேவையுடன் பல புதிய Amrit Bharat Express ரயில்களும் களமிறங்க உள்ளது.
ரயில் பாதைகள் வேகம் & பாதை மேம்பாடுகளும் மேற்கொள்ளப்படும். ரயில்வே துறையில் பெரும்பாலான track upgrades 110-130 kmphக்கு முந்தைய மேம்பாட்டில் உள்ளன. பணிகளை தீவிரமாக விரைவாக முன்னெடுக்கும் செயல்பாடாக 110–130 kmph வேகத்துக்கு track strengthening முழு மின்மயமாக்கல் (Electrification)மற்றும் புதிய சரக்கு ரயில்கள்(Dedicated Freight Corridors) மட்டும் ஓடும் தனி பாதைகள் அமைக்கப்படுகின்றன.
பயணிகளின் நீண்ட தூர ரயில்களில் சுகமான அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக சுகாதாரமும் வசதிகளும் உயர்வாக இருக்க அரசியல் முனைப்பாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியான ரயில்வே துறை அமைச்சரின் அறிவிப்பு பயணிகளை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.