ஷா லியு
ஷா லியு

இந்தியாவுடன்  நேரடி சேவை தேவை; சீன அரசு வலியுறுத்தல்!

Published on

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி வான் போக்குவரத்து சேவை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இரு நாட்டு அரசுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று சீனாவுக்கான இந்திய தூதர் ஷா லியு தெரிவித்துள்ளார்.

 கடந்த 2019-ம் ஆண்டு உலகில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இந்தியாவுக்குவுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சீனாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர்.

சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா தடையை நீக்கியதையடுத்து இப்போது இந்திய மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு சென்று தங்கள் படிப்பைத் தொடர விரும்புகின்றனர். திரும்பி செல்ல மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

 இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டதால், சீனா செல்ல விரும்பும் இந்திய பயணிகள் இலங்கை, நேபாளம், மியான்மர் வழியாக சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் அதிகமான தொகை செலவிட வேண்டியுள்ளது. ஆகவே இந்த இரு நாடுகளிடையே மீண்டும் நேரடி விமான சேவையை சீனா வலியுறுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com