நீட் தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

நீட் தேர்வு
நீட் தேர்வு
Published on

நாட்டில் அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மற்றும் மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 7-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்றவற்றில் , இன்ஜினியரிங் இளநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான தகுதித் தேர்வான ஜே.இ.இ., மெயின் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை, நேற்று இரவு வெளியிட்டது.

அந்த வகையில் ஜே.இ.இ., மெயின் தேர்வு முதல்கட்டமாக, ஜனவரி 24 முதல் 31 வரை நடக்கிறது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 6, 8, 10, 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடத்தப்படுகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான, கியூட் தேர்வு, மே 21 முதல் 31 வரையிலும், வேளாண்மைக்கான ஐ.சி.ஏ.ஆர்., தேர்வு ஏப்ரல் 26 முதல் 29-ம் தேதிவரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மற்றும் இதர அறிவிப்புகள், www.nta.ac.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com