‘வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் வெற்றி சாத்தியம்’ பாமக நிறுவனர் ராமதாஸ்!

‘வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் வெற்றி சாத்தியம்’ பாமக நிறுவனர் ராமதாஸ்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

டைபெற்று முடிந்த நடப்பு ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் தேசிய அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று இருக்கிறார். அதுமட்டுமின்றி, தேசிய அளவில் நடைபெற்ற இந்த நீட் தேர்வில் முதல் பத்து இடங்களில் நான்கு இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் பிரபஞ்சனுக்கு பாமக நிறுவனம் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் நால்வர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முதலிடம் பிடித்திருக்கிறார்கள் என்பதாலேயே அத்தேர்வை நியாயப்படுத்த முடியாது. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் அளவுக்கு வாய்ப்பும், வசதிகளும் உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் வெற்றி சாத்தியம். கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு நீட் வெற்றி இப்போதும் எட்டாக்கனிதான். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு எப்போது விலக்கு கிடைக்கிறதோ, அப்போதுதான் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சாத்தியமாகும். அதுதான் சமூக நீதிக்கு நிலையான வெற்றியாக அமையும்” என்று பதிவு செய்திருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com