அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கை: முத்தரப்பு பேச்சு வார்த்தை!

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கை: முத்தரப்பு பேச்சு வார்த்தை!

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக, தொழிற்சங்கத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது

நேற்று முன்தினம் சென்னையில் மாநகர பேருந்துகளை நிறுத்தி விட்டு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஒப்பந்த ஓட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது . சென்னை, கும்பகோணம், திருச்சி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 12 பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் 400 ஒப்பந்த ஓட்டுனர்கள் நியமிக்க திட்டமிட பட்டிருந்தது.

சென்னையில் மட்டும் அண்ணா நகர், பல்லவன் சாலை, கோயம்பேடு பணிமனைகளில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பணிமனையிலும் 40 ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கப்படவிருந்த நிலையில், அரசு அங்கீகரிக்கப் பட்ட ஏஜென்சிகள் ஒப்பந்தத்தை கோரலாம் என போக்குவரத்து துறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பஸ்களை, திடீரென நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்திருந்தார்.

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதினை தொடர்ந்து இன்று இது குறித்த முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் துவங்குகிறது.

இன்று தொழிலாளர்கள் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படா விட்டால் போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com