Netflix சந்தாதாரர்களின் விவரங்கள் திருடப்படுகிறது. ஹேக்கர்கள் கைவரிசை!

Netflix சந்தாதாரர்களின் விவரங்கள் திருடப்படுகிறது. ஹேக்கர்கள் கைவரிசை!
Published on

பிரபல OTT தளமான Netflix பெயரைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் சந்தாதாரர்களின் பேமெண்ட் விவரங்களைத் திருடி வருகின்றனர். 

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளமானது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் அதிகமான Netflix சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இந்த தளத்தில் வெளியிடப்பட்ட வெட்னஸ்டே, ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ், மணி ஹைஸ்ட், போன்ற வெப் சீரிஸ்கள் நாள்தோறும் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் இதன் சந்தாதாரர்களும் மாதந்தோறும் பணம் செலுத்தி வருகின்றனர். 

இதைப் பயன்படுத்தி, நெட் ஃப்லிக்ஸ் சந்தாதாரர்களின் பேமெண்ட் விவரங்களை ஒரு ஹேக்கர் கும்பல் மின்னஞ்சல் வழியாக திருடி வருகிறது. திருடப்படும் விவரங்களை வைத்து சந்தாதாரர்களின் பணம் பறிபோக வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக செயல்பட்டால் இதை எளிதாக தவிர்க்க முடியும். 

நெட் ஃப்லிக்ஸ் நிறுவனம் போலவே ஒரு போலியான மின்னஞ்சலை அனுப்பும் இந்த ஹேக்கர் கும்பல், அந்த மின்னஞ்சலில் "உங்களுடைய 2023 ஆம் ஆண்டின் பேமெண்ட் பெண்டிங்கில் உள்ளது. இதை உடனடியாக அப்டேட் செய்யவில்லை என்றால் உங்களுடைய சேவை தற்காலிகமாக முடக்கப்படும். எனவே உங்களுடைய பிளானை உடனடியாக அப்டேட் செய்யுங்கள்" என குறிப்பிட்டிருக்கும். அத்துடன் பேமெண்ட் செய்வதற்கான இணைப்பையும் அதில் கொடுத்து, வங்கி விவரங்கள் போன்றவற்றை அதில் உள்ளீடு செய்யச்சொல்வார்கள். 

இதை நம்பி உடனே அதில் பணம் செலுத்த முயற்சித்தால் நீங்கள் செலுத்தும் பணமானது ஹாக்கர்களுக்கு போய்விடும். மேலும் அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய வங்கி விவரங்களையும் கொடுத்து விடுவதால், அதை வைத்து அவர்கள் உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற போலி மின்னஞ்சல் களிலிருந்து சற்று கவனமாக இருங்கள். தேவைப்பட்டால் Netflix இணையதளத்திற்கு சென்று ஹெல்ப் சென்டர் மூலமாக உங்களுக்குத் தேவையானதை அறிந்து கொள்ளலாம் அல்லது நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் புகார் அளிக்கவும் அதைப் பயன்படுத்தலாம். 

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இணையக் குற்றங்கள் அதிகரித்து விட்டதால், நாம் கவனக் குறைவுடன் இருந்தால் எளிதாக நம்மையும் ஏமாற்றி விடுவார்கள். பெரும்பாலான ஆன்லைன் குற்றங்கள் ஓடிபி, ஃபேக் லிங்க், எஸ்.எம்.எஸ், மற்றும் ஈமெயில் வழியாகவே நடக்கிறது. எதையும் கண்மூடித்தனமாக நம்பி விடாமல் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள, கிராஸ் செக் செய்து கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com