பிரதமர் மோடியை, ‘சைத்தான்’ என விமர்சித்த சயீத் அன்வர் பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம்!

பிரதமர் மோடியை, ‘சைத்தான்’ என விமர்சித்த சயீத் அன்வர் பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம்!

ந்தியப் பிரதமர் மற்றும் இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் பலரையும் அண்டை நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் அடிக்கடி விமர்சனம் செய்வது வாடிக்கைதான். அதேசமயம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது வெளியுறவுக் கொள்கையையும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் போன்ற பல தலைவர்கள் பாராட்டிப் பேசியதையும் கடந்த காலத்தில் நாம் கண்டோம்.

கொள்கை முரண்பாடுகளால் தங்களுக்குப் பிடிக்காதவர்களை விமர்சனம் செய்துவது ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியா குறித்தும், இந்திய தலைவர்கள் குறித்தும் வேண்டுமென்றே அடிக்கடி கடும் சொற்களால் வசைபாடி வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான சயீத் அன்வர் இந்தியப் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி உள்ளார்.

ஒரு சமயம் பிரதமர் மோடி குஜராத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த மசூதியில், 'ஆஸான்' சத்தம் கேட்டு (மசூதி தொழுகைக்கான அழைப்பு) தனது பேச்சை நிறுத்தினார். அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த கூட்டத்தின்போது, 'ஆசான்' சத்தம் கேட்டு தனது பேச்சை நிறுத்தினார். இவ்விரு சம்பவங்களுக்காகவும் அவர்கள் இருவரையும் பலரும் பாராட்டினர்.

பாஜக தலைவர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் இதனைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின்போது, ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம், கூடலூரில் பேசியபோது, மசூதியில் தொழுகைக்கான ஆசான் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது பேச்சை 2.45 நிமிடங்கள் நிறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சயீத் அன்வர் விமர்சனம் செய்து பேசி உள்ளார். சமீபத்தில் இவர் ஒரு கூட்டத்தில் பேசியபோது, ‘இந்திய பிரதமர்’ எனக் குறிப்பிட்டு, “ஆசான் சத்தம் கேட்டு உங்கள் பேச்சை எத்தனை முறை நிறுத்தினாலும் நீங்கள் சைத்தான்கள் பிடித்த இந்துவாகவே இருப்பீர்கள்'' எனப் பேசி உள்ளார். அதேபோல், அமைச்சர் அமித்ஷாவையும் அவர் விமர்சித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தும், சயீத் அன்வரை கடுமையாகத் தாக்கிப் பேசவும் தொடங்கி உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com