இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), iOS மற்றும் Android சாதனங்களுக்கான புதிய ஆதார் கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குடியிருப்பாளர்கள் தங்கள் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்ல பாதுகாப்பான வழியை வழங்குகிறது. புதிய ஆதார் செயலி தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது, ஆனால் பயனர்கள் அதை கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து அரசின் இறுதி வெளியீட்டிற்கு முன் கருத்துக்களை வழங்கலாம்.
இந்த செயலியை ஆரம்பகால பயனாளர்கள் பயன்படுத்தும் போது, ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் தங்கள் கருத்தைfeedback.app@uidai.net.in என்ற முகவரியில் அவர்கள் தெரிவிக்கலாம்.
இதற்கு முன்பு இருந்த mAadhaar செயலி, ஆதார் கார்டைப் பார்ப்பது, இ-ஆதார் பதிவிறக்கம் செய்வது அல்லது விர்ச்சுவல் ஐடி உருவாக்குவது போன்ற அடிப்படை வசதிகளை மட்டுமே வழங்கியது.ஆனால், இந்தப் புதிய ஆதார் செயலி அதைவிட மேம்பட்ட அம்சங்களுடன் வந்துள்ளது. இது ஒரு புதிய டிஜிட்டல் பாதுகாப்பு தளமாகும்.
இதற்கு ஒரு X (முன்னர் ட்விட்டர்) பதிவில், UIDAI, உடனடி, காகிதமற்ற ஆதார் சரிபார்ப்பை அனுபவிக்க, செயலியின் ஆரம்ப அணுகல் பதிப்பைப் பயணர்கள்பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அரசாங்கம் அனைத்து பொதுமக்களுக்கும் ஒரு நேரடி ஆதார் அட்டையின் வசதியுடன், அதன் டிஜிட்டல் நகல் அங்கீகார செயல்முறையையும் தற்போது வழங்க முன்வந்துள்ளது.மேலும்.இது. , வங்கிகளில் கணக்குகளைத் துவங்குதல், ஓட்டுநர் உரிமம் பெறுதல்,கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தல்போன்ற பிற பல்வேறு சேவைகளுக்கும் அடையாளச் சான்றாக பய்னபடும்.
புதிய ஆதார் செயலியின் முக்கிய அம்சங்கள் :
இதன் மூலம் பயனர்கள் தங்கள் ஆதார் ஐடியை டிஜிட்டல் முறையில் பகிர்ந்து கொள்ளலாம். பிரதிகள் தேவையில்லை.இந்த செயலி QR குறியீடு அல்லது சரிபார்க்கக்கூடிய சான்றுகள் வழியாக ஆதார் விவரங்களைப் பகிர அனுமதிக்கும். விவரங்கள் மறைக்கப்பட்ட வடிவத்தில் பகிரப்படுகின்றன. அதாவது பயனர்கள் தங்கள் முழு 12 இலக்க எண்ணை வெளிப்படுத்த வேண்டியதில்லை.ஒரே மொபைல் போனில் ஐந்து ஆதார் சுயவிவரங்கள் வரை சேர்க்கும் வசதியும் இதில் உள்ளது.இந்த அம்சம், தங்கள் தொடர்பு எண்ணில் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் இது பயோமெட்ரிக் பூட்டுதல்/திறத்தல் முறையைக் கொண்டு செயல்பட அனுமதிக்கிறது. ஆதார் சுயவிவரத்தில் சேமிக்கப்பட்ட பயோமெட்ரிக் தரவு, அது தற்காலிகமாகத் திறக்கப்படும் வரை அல்லது கணினியால் முடக்கப்படும் வரை பூட்டப்பட்டிருக்கும்.
சில குறைபாடுகளும் அதில் உள்ளன. பழைய mAadhaar செயலியில் இருந்த இ-ஆதார் PDF பதிவிறக்கம், PVC கார்டு ஆர்டர் செய்தல், அல்லது மின்னஞ்சல்/மொபைல் சரிபார்ப்பு போன்ற சில அம்சங்கள் இதில் தற்போது கிடைக்கவில்லை. இதனால், பழைய ஸ்மார்ட்போன்கள் அல்லது சாதாரண போன்கள் வைத்திருப்பவர்களுக்கு இது பயன்படாது என்கின்றனர்.
புதிய ஆதார் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?
ஆதார் செயலியை நமது கைப்பேசியில் உள்ள ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.செயலியைத் திறந்து, நமக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து, 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.OTP-ஐப் பெற பதிவுசெய்யப்பட்ட எண்ணைப் பயன்படுத்த வேண்டும். பின்னர் முகம் ஸ்கேன் அல்லது பயோமெட்ரிக் மூலம் அங்கீகரிக்கலாம்.பின்னர் ஆதார்சுயவிவரத்தைப் பூட்டிப் பாதுகாக்க ஆறு இலக்க பாதுகாப்பு பின்னை உருவாக்கிக் கொள்ள்லாம்.
இவை முடிந்ததும், பயனர்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் பார்க்கலாம், உங்கள் QR குறியீட்டையும் மீட்டெடுக்கலாம்.இதன் மூலம் சரிபார்க்கக்கூடிய சான்றுகளைப் பகிர்ந்து கொள்ளலாம், பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி பூட்டலாம்/திறக்கலாம்.ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்யலாம். மேலும் செயலியிலிருந்து டிஜிட்டல் சரிபார்ப்புகளையும் செய்யலாம்.