வாக்குப்பதிவு நேரத்தை பதிவுச் செய்ய புதிய செயலி: தேர்தல் ஆணையம்!

வாக்குப்பதிவு நேரத்தை பதிவுச் செய்ய புதிய செயலி: தேர்தல் ஆணையம்!

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் வகையில், நகர்ப்புறங்களில் உள்ள வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்குப்பதிவுக்கான நேரத்தை பதிவு செய்யும் விதமாக “கோவின் செயலி” போன்ற ஒரு செயலியை உருவாக்க மத்தியப் பிரதேச தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோவிட் தொற்று காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கோவின் செயலி மூலம் முன்கூட்டியே ஒருவர் பெயரை பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் தடூப்பூசி போட்டுக் கொண்டனர். அதேபோல் இந்த திட்டம் செயலுக்கு வந்தால் நகர்ப்புறங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தாங்கள் வாக்குச் செலுத்த வரும் நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து வாக்களிக்க முடியும்.

இது தொடரபாக மத்தியப்பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அனுபம் ராஜன் கூறுகையில், 2018 ஆம் ஆண்டு தேர்தலில் ஊரகம் மற்றும் கிராமங்களை ஒட்டிய நகர்ப்பகுதிகளில் பதிவான வாக்குகளை ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகியிருந்ததாக தெரிவித்தார். நகர்ப்புற மக்கள் வாக்குகளை பதிவு செய்வதில் போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் கூறினார்.

எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நகர்ப்புற மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வசதியாக வாக்காளர்கள் தங்களுக்கான வாக்குபதிவு நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்ய ஒரு செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இப்படிச் செய்வதன் மூலம் வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துவிட்டு சென்றுவிடலாம்.

இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் நீண்ட க்யூ வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. குடும்ப பெண்கள், முதியவர்கள் மற்றும் வீட்டில் மகன் அல்லது மகனை பார்த்துக் கொள்ளும் பணியில் உள்ள தந்தை அல்லது தாய் ஆகியோர்க்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018 சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் குறைவான வாக்குகள் பதிவாகியிருந்த்து என்றால் அவற்றி ஐந்து நகர்ப்புற தொகுதிகளாக இருந்த்து. அதாவது குவாலியர் கிழக்கு (58 %), குவாலியர் தெற்கு (60.45%), கோவிந்தபுரம்0 போபால் (61.19%), போபால் மத்திய தொகுதி ( 59.55%) மற்றும் பிண்ட் (58.70%) தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாக இருந்தது. மேலும் அதிகம் வாக்குகள் பதிவான 10 தொகுதிகள் பெரும்பாலும் ஊரகப் பகுதிகளில் அமைந்திருந்தன.

குறைந்த வாக்குப்பதிவு இருந்த தொகுதிகளில் போபால் மத்திய தொகுதியும் ஒன்று. இங்குதான் அதிகாரிகள் பெருமளவில் வசிக்கின்றனர். கோவிந்தபுரா தொகுதி வளரும் குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. குவாலியர் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில்தான் பணக்காரர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com