ஏற்காட்டில் புதிய படகு.. குஷியில் சுற்றுலா பயணிகள்!

புதிய படகு
புதிய படகு

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்த படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வகையான படகுகள் உள்ளன அதில் குறிப்பாக ஐந்து துடுப்பு படகுகள் 30 நிமிடம் இயக்கக்கூடிய படகு பத்து பேர் அமர்ந்து ஒன்றாக செல்லக்கூடிய ஆறு மோட்டார் படகு ஆகியவை உள்ளன. இதில் குழந்தைகளை கவரும் விதமாக மிக்கி மவுஸ் அன்னப்பறவை உருவங்களை கொண்ட மிதி படகு உள்ளிட்டவையும் அடங்கும்

இதில் சுற்றுலா பயணிகளை உற்சாகமாக சவாரி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு இல்லத்தில் கூடுதலாக ஒரு படகு அறிமுகம் செய்துள்ளனர். பெரிய அளவிலான மூன்று சக்கர சைக்கிள் போன்ற காட்சியளிக்கும், அதில் இருவர் அமர்ந்து தாங்களே மிதிவண்டியை மிதித்து செல்வது போன்று இந்த படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு தற்பொழுது ஒன்று மட்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை எந்த அளவிற்கு கவரும் என்பதை பொறுத்து கூடுதல் படகுகள் படகு இல்லத்திற்கு கொண்டுவரப்படும் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த படகு சவாரி செய்யும் போது முழங்கால் வலி ஏற்படாமல் இருக்க உயரத்தில் அமர்ந்து மிதிவண்டியை மிதித்து செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளதால் வயதானவர்கள் கூட சுலபமாக இயக்க முடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள் இந்த ரக படகு வருகையால் சுற்றுலா பயணிகள் இடையே கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com