புதிய பேருந்து நிலையம் - முதல்வர் கள ஆய்வு

புதிய பேருந்து நிலையம்   - முதல்வர் கள ஆய்வு
Published on

திருவாரூரில் இரண்டாவது நாளாக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டார். சாலை வழியாக காரில் செல்லும்போது ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதைப் பெற்றுக்கொண்ட முதல்வர் கள ஆய்வு பணிகளை பார்வையிடச் சென்றார்.

மன்னார்குடியில் ரூ.25.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை (பிப்.21) வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வரும் 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து புதன்கிழமை (பிப்:22), முதல்வர் மன்னார்குடி நகராட்சியில் ரூ 26:76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

2021-22 ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், மன்னார்குடி நகராட்சி, காமராஜர் பேருந்து நிலையம் மற்றும் சந்தைப்பேட்டை பேருந்து நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 அந்த அறிவிப்பிற்கிணங்க, மன்னார்குடி புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.26.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்காக பேருந்து நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் உள்ள நகராட்சி கடைகள் காலி செய்யப்பட்டு, பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது இப்புதிய பேருந்து நிலையத்தில் 50 பேருந்து நிறுத்தங்கள், 117 புதிய கடைகள் மற்றும் நலீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடம் ஆகியவை அமைக்கப்படும்.

இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலாகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி. ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ, மன்னார்குடி நகராட்சித் தலைவர் சோழராஜன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவவர்கள் உடனிருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com