ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களுக்கு புதிய ஆபத்து. உடனடியாக இதை செய்யுங்கள்.

ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களுக்கு புதிய ஆபத்து. உடனடியாக இதை செய்யுங்கள்.

ண்ட்ராய்டு ஃபோன் பயனர்களுக்கு தற்போது புதிய ஆபத்து வந்துள்ளதாக CERT-In அறிவித்துள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு 13 OS வரை இயங்கி வரும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களிலும் பாதுகாப்பு சிக்கல் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு ஃபோன்களில் CIVN-2023-0194 என்கிற புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவந்துள்ளது. இந்த பாதிப்பால் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் பல பாதிப்புகள் ஏற்படும் எனப்படுகிறது.  இதனால் ஹேக்கர்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களை அணுகுவதற்கான கேட்வே உருவாக்கப்பட்டு, எளிதில் உள்ளே நுழைந்து, முக்கிய தகவல்களை அணுக வழி வகுக்கும். ஹேக்கர்கள் தானாகவே உள்ளே நுழைவதற்கான அனுமதியை இது கொடுத்துவிடும். இதனால் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு குறிப்பிட்ட ஆபத்து அதிகம் இருக்கிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இந்த பாதிப்பு பழைய ஆண்ட்ராய்டு சாதனம் முதல், புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்கள் வரை அனைத்து பதிப்புக்கும் பொருந்தும். மேலும் இந்த பாதிப்பில் இருந்து உங்கள் ஸ்மார்ட் ஃபோனை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதற்கான சில செயல்முறையையும் CERT-In எனப்படும் இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்டுள்ளது. 

இந்த பாதிப்பை அதிக தீவிரம் கொண்ட ஹை லெவல் பிரச்சினையாக CERT-In மதிப்பிட்டுள்ளது. ஸ்மார்ட் ஃபோன்களின் பிரேம் வொர்க், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள், சிஸ்டம், இமேஜினேஷன் டெக்னாலஜி, மீடியா டெக் மற்றும் குவால்காம் கூறுகள் உட்பட அனைத்துமே இதனால் பாதிக்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக ஆண்ட்ராய்டு 11,12,12L,13 போன்ற சாதனங்களில் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை இந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்க உடனடியாக உங்கள் சாதனத்திற்கு வழங்கும் அப்டேட்டுகளை உன்னிப்பாக கவனித்து, அதை இன்ஸ்டால் செய்யவும். பொதுவாகவே ஸ்மார்ட்ஃபோனில் கொடுக்கப்படும் அப்டேட்டுகள் அதில் உள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காகவே கொடுக்கப்படுகிறது. எனவே உங்கள் ஸ்மார்ட் ஃபோனை பாதுகாக்க உடனடியாக புதிய அப்டேட் வந்திருக்கிறதா என சரி பார்த்து அப்டேட் செய்யவும். 

தொழில்நுட்பம் வளர வளர அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டே செல்வதால், நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் கெஜெட்டுகளை பயன்படுத்தும்போது, நாம் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. என்னதான் இணையத்தில் நமக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொண்டிருந்தாலும், நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரிவதற்கு முன்பாகவே ஹேக்கர்கள் கைவரிசை காட்டி விடுகின்றனர். 

எனவே நம்மால் முடிந்தவரை சாதனங்களை அவ்வப்போது அப்டேட் செய்து அதைப் பாதுகாப்பதுடன் வைத்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com