#JUST IN : பள்ளிகளில் விரைவில் சிக்கன் பிரியாணி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!!

காலை உணவுத் திட்டத்தில் புதிய உணவு வகைகளை வழங்க உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்image credit-ibctamilnadu.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

காமராசர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, வரும் 22ஆம் தேதி காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் நடைபெறும் என்றும், இதன் மூலம் மொத்தம் 34.64 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இக்காலை உணவுத் திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது. காலை உணவு திட்டம் விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மூலம் மொத்தம் 34.64 லட்சம் மாணாக்கர் பயன்பெறுவர் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

ஏற்கனவே 19 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர் பயன்பெறும் நிலையில் கூடுதலாக 15.30 லட்சம் பேர் பயன்பெறுவர்.

சிறைக் கைதிகள் பிரியாணி சாப்பிடும் போது பள்ளி மாணவர்கள் சாப்பிட கூடாதா என கேள்வி எழுப்பிய அமைச்சர், காலை உணவு திட்டத்தில் புதிய உணவு வகைகளை சேர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கமிட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் சுகாதாரமான முறையில் சிக்கன் பிரியாணியை பள்ளிகளில் வழங்குவதற்குஎதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டத்தை, தமிழக வெற்றிக் கழக அரசுஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விரிவாக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதோடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

முன்னதாக செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இந்த விரிவாக்கம், தற்போது வரும் செப்டம்பர் 22-ம்தேதி சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இருந்த காலை உணவுத் திட்டம், தற்போது 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவடைந்து அவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய வழிவகை செய்கிறது.

logo
Kalki Online
kalkionline.com