ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புதிய நான்கு வழிச்சாலை!

ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புதிய நான்கு வழிச்சாலை!

ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சாலை மார்க்கமாக பயணிக்கும் மக்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி. ஹைதராபாத்-விசாகப்பட்டினம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக உள்ள கம்மம்-தேவரப்பள்ளி நான்கு வழி பசுமைக் கள சாலை விரைவில் நடைமுறைக்கு வரும். தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2022 செப்டம்பரில் ரூ.2,200 கோடி முதலீட்டில் நான்கு வழிச்சாலை திட்டத்தை மேற்கொண்டது.

இந்த சாலை கம்மம் மாவட்டம் வழியாக 89 கி.மீ தூரம் செல்கிறது. மொத்தம் 1,332 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி 95% நிறைவடைந்துள்ளது. கம்மம் மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. டெல்லியை தளமாகக் கொண்ட HG இன்ஃப்ரா நிறுவனம் இரண்டு பேக்கேஜ்களையும், AP இன் KMV, மீதமுள்ள தொகுப்பையும் எடுத்துள்ளது.

NHAI திட்ட அதிகாரி வி துர்கா பிரசாத் கூறுகையில், "இந்த சாலை 2024-க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்" என்றார். இந்த சாலை செயல்பாட்டுக்கு வந்ததும், விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் இடையேயான தூரம் 56 கிமீ குறையும். ஏற்கனவே 8 கி.மீ பிடி (BT) ரோடு போடப்பட்டுள்ளது. “சாலைக்காக நிலம் கையகப்படுத்தியதற்காக விவசாயிகளுக்கு ரூ.200 கோடி கொடுத்துள்ளோம். நாங்கள் 10 கோடி ரூபாய் மட்டுமே பாக்கி செலுத்த வேண்டும்,'' என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com