#JUST IN : தமிழ்நாட்டில் புதிய அரசு - தலைமைச் செயலாளர், டிஜிபி ஆலோசனை..!!

தமிழகத்தில் புதியதாக அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tamilnadu
Tamilnadu
Updated on

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக அதிக இடங்களை கைப்பற்றி தனி கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி இருவரும் தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் புதிய அரசு பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், நிர்வாக ரீதியான தயார் நிலை மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும் புதிய அரசு பதவியேற்பு விழா, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஆட்சி மாற்றத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com