
பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட 2025 வருமான வரி மசோதா திரும்பப் பெறப்பட்டது; புதிய மசோதா ஆகஸ்ட் 11 அன்று தாக்கல் செய்யப்படுகிறது
தற்போதுள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, பிப்ரவரி 13, 2025 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2025-ஆம் ஆண்டு வருமான வரி மசோதா, அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு புதிய வருமான வரி மசோதா, திங்கட்கிழமை அன்று (ஆகஸ்ட் 11) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
பழைய மசோதாவில் இருந்த திருத்தங்கள், மாற்றங்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் சேர்த்து, ஒரு தெளிவான புதிய மசோதாவை அரசு தயார் செய்துள்ளது.
இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை ஜூலை 21 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கை 4,500 பக்கங்களுக்கு மேல் நீளமானது. அதில், பழைய 1961-ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப்பட உள்ள புதிய வருமான வரி மசோதா 2025-ஐ மேம்படுத்துவதற்காக 285 பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே Income Tax India X தளத்தில் "பின்" செய்துள்ள செய்தி :
இந்தப் பரிந்துரைகளில், சில முக்கிய அம்சங்கள் சாதாரண வரி செலுத்துவோருக்கு நேரடியாகப் பலன் அளிக்கக்கூடியவையாக உள்ளன.
பல்வேறு ஊடகங்களில், புதிய வருமான வரி மசோதா, 2025-இல், நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான (LTCG) வரி விகிதங்கள் மாற்றப்படலாம் என்று செய்திகள் பரவி வருகின்றன.
இது தொடர்பாக, மத்திய அரசு ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது:
புதிய வருமான வரி மசோதா, 2025-இன் முக்கிய நோக்கம், வருமான வரிச் சட்டத்தின் மொழியை எளிதாக்குவதும், காலாவதியான அல்லது தேவையற்ற விதிகளை நீக்குவதும்தான்.
இந்த மசோதா, எந்த வரி விகிதங்களையும் மாற்றுவதை நோக்கமாகக் கொள்ளவில்லை. இது தொடர்பாக எழும் எந்தக் குழப்பமும், மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது முறையாகத் தீர்க்கப்படும்.
வீட்டுச் சொத்து வருமானத்திற்கான வரி விதிகளில் மாற்றம்:
தேர்வுக் குழு, வீடு சொத்துக்களில் இருந்து வருமானம் ஈட்டும் குடிமக்களுக்கு இரண்டு முக்கிய மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது.
நிலையான கழிவு (Standard Deduction):
நகராட்சி வரி கழித்த பிறகு தற்போது கிடைக்கும் 30% நிலையான கழிவு, புதிய சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
இதன் மூலம், வரி செலுத்துவோருக்கான குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
வீட்டுக் கடன் வட்டி கழிவு:
தற்போது, சொந்தமாக வசிக்கும் வீடுகளுக்கு மட்டுமே கிடைக்கும் வீட்டுக் கடன் வட்டி கழிவுச் சலுகை, இனி வாடகைக்கு விடப்பட்ட வீடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
முழுமையான செய்திகள் இனியும் வரும்....அதுவரை ஆகஸ்ட் 11 வரை காத்திருப்போம்.
TDS மற்றும் TCS பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறை எளிதாக்கப்படும்
பரிந்துரை என்ன?
TDS (மூலத்தில் வரி பிடித்தம்) அல்லது TCS (மூலத்தில் வரி வசூல்) பணத்தைத் திரும்பப் பெறுவதில் பல வரி செலுத்துவோர் நீண்ட தாமதங்களைச் சந்திக்கின்றனர்.
இந்தச் செயல்முறையை விரைவானதாகவும், எளிதானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்ற வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
புதிய கொள்கை என்ன?
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), "Enforcement with Empathy" என்ற புதிய கொள்கையின் கீழ் விதிகளை உருவாக்கி வருகிறது.
இந்த விதிகள், நேர்மையான வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.