புதிய கண்காணிப்பு அதிகாரிகள் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

புதிய கண்காணிப்பு அதிகாரிகள் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!
Published on

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்து இருக்கிறார்.

தமிழ் நாட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையை தவிர 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், 12 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்து இருக்கிறார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

புதிய கண்காணிப்பு அதிகாரிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, டிட்கோ நிர்வாகம், நெடுஞ்சாலைகள் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதார திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மக்கள் நல்வாழ்வுத் துறைகளை சேர்ந்த பல்வேறு திட்டங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வார்கள். அரசு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது மற்றும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனவும் கண்காணிப்பர் என தெரிகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன்,

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மனிதவள மேலாண்மைத்துறை செயலர் நந்தகுமார்,

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர்

சேலம் மாவட்டத்திற்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சங்கரும்,

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியும்,

திருப்பூர் மாவட்டத்திற்கு டான்சி நிர்வாக இயக்குநர் விஜயகுமாரும்

அரியலூர் மாவட்டத்திற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளர் அருள்ராஜ்,

கோவை மாவட்டத்திற்கு சிப்கோ நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ,

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு லலித் யாதவ்,

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை செயலாளர் செந்தில் குமார்,

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எரிசக்தித்துறை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா,

நாமக்கல் மாவட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பவியல் செயலாளர் குமரகுருபன்

ஆகியோரை மாவட்ட வாரியான கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com