தமிழக அரசின் அடுத்த அதிரடி : இனி அனைத்து கட்டணங்களும் 'ஆன்லைன்' மயம்..!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
Updated on

என்னதான் விலைவாசி ஏற்றத்துடன் இருந்தாலும், அதற்கேற்ப உழைத்து பொருளை ஈட்டி சொத்து சேர்ப்பவர்கள் பெரும்பாலும் வீட்டு மனைகளில் தான் தங்கள் முதலீடுகளை செலுத்துகின்றனர். காரணம் கட்டிடங்கள் மூலம் கிடைக்கும் வருமானமே முக்கியக் காரணமாகும். சொந்த வீடாக இருந்தால் வாடகை செலவு மிச்சம்; அதுவே வணிக கட்டிடமாக இருந்தால் வாடகை மூலம் தொடர் வருமானம் பார்க்கலாம்.

அக்காலகட்டத்தில், கட்டிட அனுமதி பெறுவதற்காக நிறைய அலைச்சல், லஞ்சம் மற்றும் காலதாமதம் போன்ற பலவிதங்களில் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த நிலை இனி இல்லை. ஆம்.மாநகராட்சி, நகராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பித்தவர்கள் இனி அனைத்து கட்டணமும் ஆன்லைனில் செலுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் புதிய கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள், அதற்கான கட்டட உரிமக் கட்டணம், மேம்பாட்டு கட்டணம், மற்றும் வைப்புத்தொகை உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் இனி முழுமையாக ஆன்லைன் வழியிலேயே செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இடைத்தரகர்களை தவிர்த்து, முறைகேடுகளை தடுத்து வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் நோக்கில் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அரசின் இந்த உத்தரவு வீட்டு மனை வாங்கிவிட்டு கட்டிட அனுமதி வேண்டி காத்திருக்கும் பெரும்பாலோருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

குறிப்பாக அலுவலகங்களில் நேரடி பண பரிவர்த்தனையை குறைப்பது,லஞ்சம், இடைநிலை தரகர் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது,கட்டிட அனுமதி செயல்முறையை வெளிப்படையாக்குவது,

விண்ணப்ப நிலையை ஆன்லைனில் கண்காணிக்க வசதி ஏற்படுத்துவது,அனுமதி வழங்கும் காலதாமதத்தை குறைப்பது போன்ற முக்கிய நோக்கங்கள் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.

விண்ணப்பிப்பது மற்றும் கட்டணம் செலுத்துவது எப்படி?

பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தற்போது தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த ஆன்லைன் தளங்கள் மூலம் விண்ணப்பங்களை ஏற்கின்றன.ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிப்பதும் கட்டணம் செலுத்துவதும் வசதியான எளிய முறை. கட்டிட அனுமதி மற்றும் மனைப்பிரிவு ஒப்புதலுக்கான புதிய விண்ணப்பங்களை தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம் (Tamil Nadu Single Window Portal for Building Permission) வாயிலாக சமர்ப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும்போது, TN Urban ePAY என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக அனைத்து கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம்.

இதற்காக நீங்கள் நேரம் ஒதுக்கி அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய தேவையில்லை. அதுமட்டுமின்றி இது தொடர்பான ஒப்புதல் சான்றிதழையும் நீங்கள் இந்த இணையதளங்கள் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்த கட்டணங்கள் ஆன்லைனில் செலுத்தலாம்?

திட்டமிடல் அனுமதி கட்டணம், கட்டிட உரிமக் கட்டணம், மேம்பாட்டு கட்டணங்கள், ஆய்வு கட்டணம்,

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணங்கள், சொத்து வரி தொடர்பான ஆரம்ப மதிப்பீடுகள், ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒப்புதல் கட்டணங்கள் போன்ற பொதுவான கட்டணங்கள் அனைத்தும் இணைய வழியாக செலுத்தலாம்.

இந்த முறையின் பலன்கள் என்ன தெரியுமா?

விண்ணப்பதாரருக்கு ரசீது உடனடியாக கிடைக்கும்..யுபிஐ,நெட் பேங்கிங் ,டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதி,போலி ரசீதுகள் மற்றும் பண மோசடி குறைதல்,அதிகாரிகளின் ஒப்புதல் நிலை டிஜிட்டலாக பதிவாகும் வாய்ப்பு.

கவனத்தில் கொள்ள வேண்டியது :

விண்ணப்ப எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இணைய மையங்கள் மூலம் விண்ணப்பித்தால் கட்டண ரசீதுகளை தனியாக சேமிக்க வேண்டும். குறிப்பாக

அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமே பணம் செலுத்த வேண்டும் என்பதில் கவனம் தேவை.

இந்த உத்தரவு முதலில் சில மாநகராட்சிகளில் அமல்படுத்தப்பட்டு, பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த வசதியை பயன்படுத்தி கட்டிட அனுமதி கட்டணத்தை செலுத்தி விரைவில் அதற்கான அனுமதியைப் பெற்று மகிழலாம்.

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப் பயன்படுத்த இனி காசு கட்டணுமா..?பதறாம இதை படிங்க!
தலைமைச் செயலகம்
logo
Kalki Online
kalkionline.com