டிரைவிங் லைசன்ஸ் செலவைக் குறைக்கும் போக்குவரத்து துறையின் புதிய திட்டம்!

Driving Licence.
Driving Licence.
Published on

டிரைவிங் லைசன்ஸ் செலவைக் குறைக்க போக்குவரத்து துறை புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.

டிரைவிங் லைசன்ஸ் பெற இரண்டு வகையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று, ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூலமாக பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்து பெறுவது. மற்றொன்று தானாக விண்ணப்பித்து ஓட்டுநர் உரிமம் பெறுவது. ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு அதிக அளவிலான தொகை செலவாவது வழக்கம். மேலும் தானாக ஓட்ட கற்றுக் கொண்டவர்களுக்கும் சொந்த வாகனம் இல்லாததால் உரிமை பெற பயிற்சி பள்ளியை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை புதிய முயற்சியை முன்னெடுத்து இருக்கிறது. தானாக விண்ணப்பித்து ஓட்டுனர் உரிமம் பெற விரும்புவோர் சொந்த வாகனம் இல்லை என்றால் இனி பிரச்சினை இல்லை. இனி இதற்காக ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகங்களிலும் தனி வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு 62 கோடி செலவில் 145 ஓட்டுநர் உரிம தேர்வு வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழகம் முழுவதும் 16 வகையான மாற்றத்துடன் விரைவில் புதிய டிரைவிங் லைசென்ஸ் அமல்..!!
Driving Licence.

ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தவர்கள் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஓட்டுனர் உரிம தேர்வு வாகனத்தை பெற்றுக்கொண்டு ஆர்டிஓ முன்பு வாகனத்தை இயக்கி காட்டி உரிமத்தை பெற முடியும். இதனால் பயிற்சி பள்ளிகளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com