செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு புதிய ரயில் சேவை!

ரயில்
ரயில்

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து தென்காசி, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு முதல் புதிய ரயில் சேவை தொடங்கியது. இதை கொண்டாடும் விதமாக பாஜகவினர் மற்றும் திமுகவினர் புதிய ரயிலுக்கு மாலை அணிவித்து ரயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் சேவையை தொடங்கி வைக்க தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த தனுஷ், எம். குமார் வருகை தந்நதனர்.

இரண்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை என்ற கணக்கில் இயக்கப்படும் இந்த ரயில் சேவை, வருகிற ஜூன் மாதத்தில் இருந்து அதிகப்படுத்தப்படுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி முதல், வாரத்தில் 3 நாட்களுக்கு இந்த ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறும்போது, ‘‘செங்கோட்டையில் இருந்து பாவூர்சத்திரம், அம்பை, திருநெல்வேலி வழியாக தாம்பரத்துக்கு நிரந்தர ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

பாவூர்சத்திரம், அம்பை, திருநெல்வேலி, விருதுநகர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக இயக்கப்பட உள்ள இந்த ரயிலுக்கு ‘தாமிரபரணி எக்ஸ்பிரஸ்’ என பெயரிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9. 35 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 7. 35 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலுக்கான கால அட்டவணை தென்னக ரயில்வே சார்பில் விரைவில் வெளியிடப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com