உறைபனியில் உறைந்து போன அமெரிக்காவின் நியூயார்க்!

உறைபனியில் உறைந்து போன அமெரிக்காவின் நியூயார்க்!

லகின் மிகவும் பரபரப்பான நகரங்களில் அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் ஒன்று. இந்த நகரில் பெரும்பாலான நாட்களில் பனி பெய்வது வழக்கம்தான் என்றாலும், தற்போது அந்நகரத்தில் வழக்கத்துக்கு அதிகமாக உறை பனி கொட்டி வருகிறது. கடுமையான இப்பனிப் பொழிவால் அந்நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை ஒட்டி இருக்கும் மிகச் சிறிய மாகாணங்களில் ஒன்று மாசசூட். இந்த மாகாணத்தில் கொட்டி வரும் கடும் உறை பனியால் அம்மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது, அந்நகர கால்நடைகள் கூட வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு தங்களது இருப்பிடங்களில் முடங்கிக் கிடக்கின்றன. இந்த மாகாணத்தின் வீதிகளில் குறைந்தபட்சமே 20 செ.மீ. அளவுக்கு உறை பனி படர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சுமார் 8 அங்குலம் அளவுக்கான உறை பனி ஆகும்.

வரலாறு காணாத இந்தப் பனிப் பொழிவினால் நியூயார்க் நகரமே ஆர்டிக் துருவம் போல் காட்சி அளிப்பதாக அந்நகர மக்கள் கூறுகின்றனர். மேலும், ‘இந்த சீசனில் நியூயார்க் நகரில் பொழிந்துள்ள அதிகபட்ச பனிப் பொழிவு இதுதான்’ எனவும் அந்நகர மக்கள் கூறி ஆச்சரியப்படுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com