ரஷ்யா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், "இந்த போரில் ரஷ்யாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன" என தென் கொரியா தெரிவித்து உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சுப்ரீம் கோர்டின் புதிய கொடி மற்றும் சின்னங்களை நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். ஊதா நிறத்திலான கொடியில், அசோக சக்கரம், உச்சநீதிமன்ற கட்டடம், அரசியல் சாசன புத்தகம் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1.59 லட்சம் கோடி வசூல் ஆன நிலையில், இந்தாண்டு ரூ.1.74 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்து இதில் பணியாற்றி வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பணியை கவனிக்கிறார்.
கடந்த சில தினங்களாகவே படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாப்பாத்திரங்களை போஸ்டர் மூலம் அறிமுகம் செய்து வருகிறது ‘கூலி’ படக்குழு. இந்நிலையில், இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் கதாப்பாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் (வெண்கலம்) வென்று கொடுத்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ப்ரீத்தி பால், மகளிருக்கான 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்று மேலுமொரு சாதனை படைத்துள்ளார்.