ஐரோப்பிய நாடான பிரான்சில், போதை பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு, டெலிகிராம் செயலியின் CEO பாவெல் துரோவ் கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், துரோவை கைது செய்துள்ள பிரான்ஸ் அரசு, அவர் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் ஜாமின் பெறுவதற்கு 46 கோடி ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. ஜாமின் பெற்றாலும், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தான் அவர் இருப்பார் என்றும், வாரத்தில் இரண்டு முறை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக, நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்ற முதல்வருக்கு சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) அமெரிக்கா வாழ் தமிழர்கள் வரவேற்பு அளித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், ''தமிழகம் செழுமை பெற அமெரிக்கா வந்துள்ளேன். வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்" என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலை அடைந்து, நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் வங்க கடலில் ரிமால் என்ற புயல் உருவான நிலையில், இந்தாண்டின் 2வது புயல் உருவானால், அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என பெயரிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் அப்டேட், ஆகஸ்ட் 28 ஆம் தேதியில் இருந்து வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய அப்டேட்டாக, மலையாள சினிமாக்களில் (கும்பலாங்கி நைட்ஸ், மஞ்சுமெல் பாய்ஸ்) தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளைப் பெற்று வரும் நடிகரான 'சௌபின் சாஹிர்' கூலி படத்தில் 'தயாள்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தெரிவித்துள்ளது.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோலி, 737 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருந்து 'நம்பர்-8' இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா (751 புள்ளி) 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இளம் இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 740 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருந்து 7- வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.