கோடீஸ்வரர்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலில் பெய்ஜிங் நகரை பின்னுக்குத் தள்ளி மும்பை முதலிடம் பிடித்தது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியாகவும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டுள்ளார். அங்கு ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை தீவுத்திடலை சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருப்பதால் நாளையும் நாளைமறுநாளும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுளுள்ளதாக பெருநகர சென்னைப் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. உழைப்பாளர் சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற 'விடுதலை' படத்தின் 2-ம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில், கிறிஸ்டியானோ ரொனால்டோ 183 போட்டிகளில் விளையாடி 140 கோல்கள் அடித்து, 5 சாம்பியன் பட்டங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், அதிக கோல்கள் அடித்ததற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவை UEFA (Union of European Football Associations) கௌரவித்துள்ளது. இவர் சமீபத்தில் Youtube channel தொடங்கிய நான்கு நாட்களில் 42.5 மில்லியன் subscribers பெற்றது குறிப்பிடத்தக்கது.