News 5 – (01-08-2024) கடந்த ஆண்டே நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்த இஸ்ரோ!

News 5
News 5

1. இந்தியாவுக்கு 3-வது பதக்கம்!

Swapnil Kusale Bronze Medal
Swapnil Kusale Bronze Medal

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஏற்கனவே துப்பாக்கிச்சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வெற்றுள்ள இந்தியா மேலும் ஒரு பதக்கத்தை கைப்பற்றியது.

2. 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி!

Surya, Jyotika and Karthi.
Surya, Jyotika and Karthi.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், நிவாரண பணிகளுக்காக கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயை நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து வழங்கி உள்ளனர்.

3. குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது அறிவிப்பு!

Kumari Ananthan
Kumari Ananthan

தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவரும், பேச்சாளருமான குமரி அனந்தனுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது குமரி அனந்தனுக்கு விருதுடன், ரூ.10 லட்சம் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

4. கடந்த ஆண்டே நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்த இஸ்ரோ!

ISRO issued a landslide warning last year!
ISRO issued a landslide warning last year!

வயநாடு உள்ளிட்ட 147 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டு கடந்த ஆண்டே இஸ்ரோவின் 'தேசிய தொலைநிலை உணர்தல் மையம்' எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவால் அதிக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளது. மேலும், தமிழகத்தின் கோவை, குமரி, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்ட மலைப்பகுதிகளில் பல இடங்கள், நிலச்சரிவு அபாயம் மிக்கவை என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. அதில் நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி மாவட்டங்கள் நிலச்சரிவு ஆபத்து சற்று குறைவாக உள்ளதாக வகைப்படுத்தியுள்ளது. நிலச்சரிவு அபாயம் மிக்க 147 மாவட்டங்களில் கோவை மாவட்டம் 36- வது இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம் 41வது இடத்திலும் இருப்பதாக கூறியிருந்தது.

5. நாடோடிகளிடம் இருந்து கரடி குட்டிகளை மீட்ட அதிகாரிகள்!

Bear cub
Bear cub

நாடோடி சமூகத்தினர், கரடி குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்து அதற்கு கடும் பயிற்சி கொடுத்து பாகிஸ்தானில் சாலையோரத்தில் வேடிக்கை காட்டி பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படுத்தியுள்ளனர். நடனம் ஆடும் பழக்கம் இல்லாத கரடி குட்டிகளை பயிற்சி என்ற பெயரில் சித்ரவதை செய்துள்ளனர். இதை அறிந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களிடம் இருந்து கரடிகளை மீட்டு, சிகிச்சை அளித்து  இஸ்லாமாபாத் வனவிலங்கு முகாமில் சேர்த்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com