News 5 – (01-08-2024) பதக்கங்களை கைப்பற்றுமா இந்தியா?

News 5
News 5

1. பதக்கங்களை கைப்பற்றுமா இந்தியா?

The Paris Olympic Games
The Paris Olympic Games Credits : Olympic Games Paris 2024

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பதக்க வாய்ப்பு உள்ள 3 போட்டிகளில் இந்தியா இன்று விளையாடவுள்ளது. 20 கி.மீ. ஆண்கள் நடை ஓட்டம் இறுதிப்போட்டியில் ஆகாஷ்தீப், விஷாஷ், பரம்ஜீத் ஆகியோர் பங்கேற்கின்றனர். 20 கி.மீ. பெண்கள் நடை ஓட்டம் இறுதிப்போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி பங்கேற்கிறார். துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் 50 மீ. ரைபிள் இறுதிப்போட்டியில் ஸ்வப்னில் குசலே பங்கேற்க உள்ளார். இதுவரை 2 பதங்கங்களை வென்றுள்ள இந்தியா, மேலும் பதக்கங்களை வெல்லுமா?  

2. சிலிண்டர் விலை உயர்வு!

gas
gas

சென்னையில் வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, 19 கிலோ சிலிண்டர் இனி 1,817 ரூபாய்க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் 14 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ₹818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

3. பாக்கெட்களில் அடைத்து ரேஷன் பொருட்கள் வழங்கத் திட்டம்!

Ration shop
Ration shop

தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்களை பாக்கெட்களில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் உள்ள நியாய விலைக்  கடையில் நடைமுறைக்கு வந்துள்ளது. சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா 1 ரேஷன் கடையை தேர்வு செய்து தொடங்கியுள்ளனர்.  மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை வைத்து அனைத்து கடைகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

4. இலங்கை கப்பல் மோதி 4 மீனவர்கள் மாயம்!

Sri Lankan ship collided with 4 fishermen!
Sri Lankan ship collided with 4 fishermen!

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகில் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த நான்கு மீனவர்கள் கடலில் விழுந்து மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

5. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!

Former Indian cricketer Anshuman Gaekwad passed away!
Former Indian cricketer Anshuman Gaekwad passed away!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட் (71) காலமானார். அன்ஷுமன் கெய்க்வாட் மருத்துவ செலவுக்கு பிசிசிஐ உதவ வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அண்மையில் பிசிசிஐ ₹1 கோடி வழங்கியிருந்தது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவந்த அன்ஷுமன் கெய்க்வாட் நேற்று காலமானார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com