News 5 – (02-08-2024) வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கான அதிரடி அறிவிப்பு!

News 5
News 5

1. வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜோ பைடன்  இரங்கல்!

Joe Biden
Joe Biden

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சிக்கலான மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வீரத்தை பாராட்டுவதாகவும் கூறியுள்ளார்.

2. யுஜிசி நெட் மறுதேர்வு அட்டவணை வெளியீடு!

UGC NET
UGC NET

யுஜிசி நெட் மறுதேர்வு அட்டவணை வெளியிடபட்டுள்ளது. முறைகேடு இருப்பதாக ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான மறுதேர்வின் விரிவான கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, மறுத்தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை, தேர்வு மையம், ஹால் டிக்கெட் வெளியீடு குறித்த தகவல்களை ஆகஸ்ட்  5 -ம் தேதி   www.ugcnet.nta.nic.in; http://www.nta.ac.in/ என்ற இணையதள முகவரியில் அறிந்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

3. வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கான அதிரடி அறிவிப்பு!

M.K. Stalin
M.K. Stalin

வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் முதல்முறை பயண செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் "அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு தடைகளை தாண்டி உயர்கல்விக்குச் செல்கிறீர்கள், தடைகள் பல வரலாம்; படிப்பில் கவனம் செலுத்துங்கள்; தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாறுங்கள்; சாதிக்க வேண்டும்" என அறிவுரை வழங்கியுள்ளார். 

4. 'ராயன்' திரைப்படத்தின் திரைக்கதை தேர்வு!

Raayan
Raayan

கடந்த ஜூலை 26 அன்று வெளியான 'ராயன்' திரைப்படத்தின் திரைக்கதை, ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் காட்சிப்படுத்த தேர்வாகியுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

5. வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

India's Thiraj-Ankita pairing advanced to the quarter-finals
India's Thiraj-Ankita pairing advanced to the quarter-finals

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில்  Round of 16 சுற்றில் இந்தோனேசியா இணையை 5 - 1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது இந்தியாவின் திரஜ் - அங்கிதா இணை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com