ஜூலை 13ஆம் தேதியன்று 90 பணியிடங்களுக்கு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்ட்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை அமல்படுத்தியது தமிழக சுகாதாரத்துறை.
மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும்.
மருத்துவமனை பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை, பாதுகாப்பு என 2 கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.
மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
"தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 11,743 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்" என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
"எனக்கு ஆர்சிபி அணியில் விளையாட வேண்டும் என்று ஆசை. ஏனென்றால் விராட் கோலி தான் எனக்கு பிடித்த வீரர். மேலும் ஆர்சிபி அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை, அதனால் அதற்கு உதவ வேண்டும் என எண்ணுகிறேன்" என டெல்லி டி20 தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யா கூறியுள்ளார்.